அஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி திருக்கோவில்
தல வரலாறு ...←↪
காவிரி , அமராவதி , திருமணிமுத்தாறு ஆகிய மூன்று நதிகள் சங்கமித்ததால் இத்தலத்திற்கு திருமுக்கூடலூர் என்று அழைக்கப்படுகிறது ...
அகஸ்திய முனிவர் அமராவதி நதிக்கரையில் சிவ பூஜைக்காக மண்ணால் உருவாக்கிய லிங்கம் ...←
அகஸ்தியர் சிவ பூஜைக்காக வாலியிடம் சிவலிங்கம் கொண்டுவரும்படி கேட்டார் ...↸
வாலி வருவதற்கு கால தாமதம் ஆனதால் அகஸ்தியர் ஆற்று மணலில் சிவலிங்கத்தை செய்து வழிபட்டார் ...←
வாலி விஷயம் அறிந்து கோபமுற்று தான் கொண்டுவந்த லிங்கத்தையே பூஜிக்கவேண்டும் என அகஸ்தியர் ஆகர்ஷணம் செய்த லிங்கத்தை தன வாலால் சுற்றி பிடுங்க முயற்சித்தபோது வால் துண்டுற்று ஆற்றின் மறுகரையில் வீழ்ந்தான் ...
( வாலி கொண்டுவந்த லிங்கத் தை ஆங்கே பூஜித்த தலம் ஆற்றின் மறுகரை இன்று வாலீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது...)

No comments:
Post a Comment